“நிவாரண தொகை கோரும் சலவை தொழிலாளர்கள்” – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
13 August 2020, 3:43 pmசலவை தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை, ஓய்வூதியம் வழங்குவதில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள சலவை மற்றும் துணி தெய்க்கும் தொழிலாளர்கள் 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
ஆகையால், சலவை தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை மார்ச் மாதம் முதல் 6 மாதத்திற்கு ரூ.3000 வீதம் ரூ.18,000 வழங்கவும் மேலும் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் ரூ.1000 வழங்கவும் உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக செப்.4 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.