ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்கக் கூடாது : மருத்துவர்களுக்கு அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுறுத்தல்

16 May 2021, 12:15 pm
ma subramanian - updatenews360
Quick Share

சென்னை ; ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று லேசான அறிகுறி தென்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து சிறந்த பலனை கொடுக்கிறது. எனவே, ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்து, அதன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகளை பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பரவும் சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரைக்கக் கூடாது என்று மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செயிதியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ரெம்டெசிவிர் மருந்தை அவசர தேவை இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரை செய்யக் கூடாது. ரெம்டெசிவிர் மட்டுமே உயிர்காக்கும் என நினைத்துக் கொண்டு, அதனை வாங்க மக்கள் படையெடுக்கின்றனர், என்றார்.

Views: - 120

0

0