கோவையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவக்கம் : மருந்தை பெற சான்றுகள் அவசியம் என அறிவிப்பு!!

8 May 2021, 12:50 pm
Remdisiver - Updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.

ஆனால், மருந்து பதுக்கி வைக்கப்படுவதாகவும் இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்று முதல் தமிழகத்தில் கோவை, மதுரை சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது. கோவையை பொறுத்தவரையில் அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் இதற்காக பிரத்யேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் வரிசையில் வந்து மருந்தை வாங்கிச் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மருந்தை வாங்க வருபவர்கள் முறையான சான்றுகளை எடுத்து வர வேண்டும் என்று மருத்துவமனை டீன் நிர்மலா கூறியுள்ளார். ஒரு நோயாளிக்கு 6 மருந்துகள் வழங்கப்பட உள்ளது. மருந்து ஒன்றிற்கு ரூ.1568 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மருந்து வாங்க தேவையான சான்றுகள்

*ஆர்.டி.பி.சி.ஆர் (கொரோனா பரிசோதனை ரிப்போர்ட்)

*சிடி ஸ்கேன் ரிப்போர்ட்

*மருத்துவரின் பரிந்துரை (அசல்)

*நோயாளிகளின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)

*மருந்து வாங்க வந்த நபரின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)

*மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரெம்டெசிவர் மருந்தினை வாங்கி கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 151

0

0