கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க கோரிக்கை: ஆட்சியரிடம் அர்ஜுன் சம்பத் மனு..!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 3:53 pm
Quick Share

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கிய நிபந்தனைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விழாவை நல்லபடியாக முன்னின்று நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

புதுச்சேரி, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை தயாரிப்பவர்களை மிரட்டுவது, விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Views: - 312

0

0