கோவையில் ராஜ ராஜ சோழன் சிலை அமைக்க கோரிக்கை..! ஆட்சியரிடம் பாஜக மனு!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 2:12 pm
Raja Raja Chozhan - Updatenews360
Quick Share

கோவை : காந்தி பார்க் ரவுண்டானாவில் சோழப் பேரரச மன்னன் ராஜ ராஜ சோழனுக்கு சிலை அமைக்க கோரி பாஜகவினர் மனு அளித்தனர்.

கோவை மாநகர் மாவட்டம் பாஜக ஆர்.எஸ்.புரம் மண்டல பகுதியின் தலைவராக ராஜாரத்தினம் இருந்து வருகிறார். இவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அதில், கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் உள்ள இடத்தில் தமிழரின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் சோழப் பேரரசின் தமிழ் சக்கரவர்த்தியான ராஜ ராஜ சோழனுக்கு முழு உருவ சிலை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும்,அதன்படி ,சுக்கரவார்பேட்டை மற்றும் தடாகம் சாலைகள் சந்திக்கும் பகுதியான காந்தி பார்க் ரவுண்டானாவில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு குறிப்பிட்டிருந்தது.

Views: - 134

0

0