கிணற்றில் இருந்து பட்டதாரி பெண் சடலமாக மீட்பு : கணவன் மீது உறவினர்கள் புகார்.. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 12:02 pm
Woman Suicide - Updatenews360
Quick Share

தாராபுரம் அருகே பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் புகார் அரசு மருத்துவமனை முற்றுகை ஆர்டிஓ விசாரணை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குள்ளாய் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். கோழிப்பண்ணை உரிமையாளர் இவரது மனைவி லாவண்யா (வயது 27) பிகாம் பட்டதாரி.

இருவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லாவண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது குழந்தை பேருக்காக லாவண்யாவின் தந்தை மாரியப்பன் வீட்டிற்கு சென்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

லாவண்யா தந்தை வீட்டிற்கு சென்ற போது அடிக்கடி இருவரும் போனில் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லாவண்யாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை சுகுமார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.வந்த நாள் முதல் கணவன் மனைவியிடம் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது சுகுமார் லாவண்யாவிடம் தந்தையை பற்றி தரக்குறைவாக பேசியதால் லாவண்யா மன உளைச்சலில் இருந்துள்ளதாகவும் பெண்ணின் தந்தை கூறினார்.

இந்நிலையில் அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்த லாவண்யா அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். இதனை கண்ட சுகுமார் தானும் கிணற்றில் குதித்து லாவண்யாவை தேடுவதற்குள் இறந்துவிட்டார்.

இதனை அறிந்த சுகுமார் தனது மாமனார் வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் லாவண்யாவின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் லாவண்யாவின் தந்தை மாரியப்பன் தாராபுரம் ஆர்டிஓ குமரேசனுக்கு புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஆர்டிஓ குமரேசன் குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதற்குள் விஷயம் லாவண்யா உறவினர்களுக்கும் சுகுமாரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிந்தும் இரு தரப்பினரும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது லாவன்யாவின் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்டிஓ குமரேசன் இறந்து போன லாவண்யா திருமணமாகி மூன்று ஆண்டுகளான நிலையில் இருந்துள்ளார் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

இருந்தும் லாவண்யாவின் உறவினர்கள் சுகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் 2 மணி நேரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு கொண்டனர் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 504

0

0