அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…!!

14 April 2021, 12:42 pm
cbe ambethkar - updatenews360
Quick Share

கோவை: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கோவை எஃப் சி ஐ குடோனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இன்றைய தினம் சட்ட மாமேதை என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் அவருடைய உருவ படத்திற்கும், அவருடைய சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை எஃப் சி ஐ குடோனில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநகர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட பட்டியல் அணித்தலைவர் விவேக் , மண்டல தலைவர் தாமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 33

0

0