கோவையில் உணவகங்கள் திறப்பு : வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு!!

5 July 2021, 11:19 am
Hotels Open - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா ஊரடங்கில் இடத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் அனைத்து உணவகங்களிலும் அமர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் சென்னை பாதிப்பினை காட்டிலும் அதிக அளவிலான பாதிப்புக்கு உள்ளாகி கோவை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

தற்போது தொற்று குறைந்திருக்கின்ற நிலையில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தரப்பட்டு பல்வேறு சேவைகளும் துவங்கப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் கடைகளில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

50 சதவிகித இருக்கைகளுடன் உணவகங்கள் வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவு பரிமாற அனுமதி தரப்பட்டிருக்கின்ற நிலையில் கோவை உணவகங்கள் முழுமையாக திறக்கவில்லை. 75 சதவிகித உணவகங்கள் பார்சல் சேவைகளையே பரிந்துரைக்கின்றன.

பெரும்பாலான உணவக பணியாளர்கள் வெளி மாவட்டங்களில் இருப்பதனால் உணவக பணிகளுக்கு அவர்கள் முழுமையாக வரவில்லை.

பேருந்துகள் போக்கு வரத்து சேவை இன்று தொடங்கிய நிலையில், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பணியாளர்கள் வந்தவுடன் முழுமையாக உணவகங்கள் வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவகங்கள் இயங்கவிருக்கின்றன.

Views: - 129

0

0