ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடததிய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கடந்த ஏப்ரல் 22ல் பலியாகினர்.
இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதையும் படியுங்க: தண்டவாளத்தில் கல்லூரி மாணவர்கள் செய்த செயல்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி : 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்.!
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இதில் 70 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகின.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். அதன்படி காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின.
அதில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் வேறு பகுதிக்கு பாதுக்காப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் வழங்கி வருகின்றனர்.
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த செஞ்சி மோட்டூர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இதையும்…
This website uses cookies.