ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை மிரட்டி கத்தி முனையில் கொள்ளை : 20 சவரன் நகைகளுடன் மர்மநபர்கள் தலைமறைவு!!

2 July 2021, 10:03 am
Dgl Theft - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை மிரட்டி வீட்டில் உள்ள நகைகளை கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சென்னமநாயக்கன்பட்டி அடுத்த சக்தி முருகன் நகரில் வசிப்பவர் பழனி (வயது 57) மருத்துவத் துறையில் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி அருந்ததி (வயது 50) ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் ராகுல் (வயது 24) .

திண்டுக்கல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வீட்டின் பின்புற கேட்டை உடைத்து உள்ளே வந்துள்ளனர்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பழனி மற்றும் அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி அவர்களைத் தாக்கி வீட்டில் இருந்த இருந்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

கொள்ளையர்கள் வீட்டிலிருந்து சென்றவுடன் பழனியும் அவரது மனைவியும் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். கீழே வந்த பார்த்த ராகுல் அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் நடந்த பகுதிக்கு உடனடியாக வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்தனர் பிறகு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை, தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.
மேலும் இது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இருக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களை தாக்கி 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 128

0

0