தாத்தாவுக்கு உதவி செய்து பேத்திக்கு கருக்கலைப்பு.. தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது…
Author: kavin kumar18 August 2021, 7:31 pm
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு உதவி செய்து கருகலைப்பில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி பேத்தியை பாலியல் உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கிய தாத்தா முனியாண்டி என்பவனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். அவருக்கு உதவியாக கருகலைப்பு செய்ய அந்த சிறுமியை அழைத்து சென்ற பெண் இந்திராணி என்பவரையும் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கருகளைப்பு செய்த மனம்பூண்டி பகுதியை சேர்ந்த செவிலியர் ராஜாமணி எனபவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமறைவு செவிலியரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் 14 நாட்கள் கழித்து ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக தஞ்சாவூரில் இருபதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற தனிபடை போலிசார் தலைமறைவாக இருந்த ராஜாமணியை கைது செய்த, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 14 நாட்கள் சென்ற நிலையில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக கருகலைப்பில் ஈடுபட்டு வரும் ராஜாமணியை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0
0