ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் கைவரிசை : 65 சவரன் நகை, 25 கிலோ வெள்ளி… லிஸ்டு போயிட்டே இருக்கு!

18 January 2021, 1:01 pm
Retired Govt Staff Theft - Updatenews360
Quick Share

மதுரை : ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 65 சவரன் நகை, 25 கிலோ வெள்ளி பாத்திரங்கள் மற்றும் துப்பாக்கி கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ் காலனி துரைசாமி நகர் ஷாலினி தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 60). இவர் மதுரையில் துணை தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் ரவீந்திரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் உள்ள சம்பந்தி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று உள்ளார்.

அப்போது இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள், ரவீந்திரன் வீட்டு முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 65 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பாத்திரங்கள் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்,

இந்த நிலையில் ரவீந்திரன் இன்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பாத்திரம் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியைடைந்தார்.

இது தொடர்பாக ரவீந்திரன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தாசில்தார் வீட்டில் நகை பணம் மற்றும் துப்பாக்கி ஆகியவை கொள்ளை போனது மதுரை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0