இயல்பு நிலைக்கு திரும்பும் கோவை: நடைபாதை, சிறு வியாபாரிகள் நிம்மதி..!!

6 July 2021, 4:15 pm
Quick Share

கோவை: கோவையில் மெதுவாக இயல்பு நிலை துவங்கிய நிலையில் மாண்பானைகள் விற்பனை சூடு பிடித்து வருகின்றது.

உலகையே அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தற்போது மெதுவாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் பிறப்பிக்கபட்டு மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகின்றது.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மண்பாணை சாமான்கள் விற்பனை தற்போது மெதுவாக சூடு பிடித்து வருகின்றது. இதுகுறித்து அந்த பகுதியில் மண்பாண்ட பொருட்கள் விற்பனையாளர் சிவகுமார் கூறுகையில், கொரோனா காலத்தில் இரண்டு மாதம் வெயில் காலமாக இருந்ததால் குடிநீர் பாணை விற்பனையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய அவர், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் விற்பனை மெதுவாக நடைபெறுவதாக தெரிவித்தார்.

Views: - 147

0

0