சுருக்கு வலையால் ஏற்பட்ட கலவரம் : 3 மீனவ கிராமங்களில் மறு உத்தரவு வரும் வரை 144 தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 6:38 pm
144 - Updatenews360
Quick Share

சுருக்கு வலை பயன்படுத்தியதால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராம மீனவ மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தடுப்பதாக நல்லவாடு பகுதியில் ஒரு முறை துப்பாக்கி சுடும், தேங்காய்திட்டு முகத்துவாரம் பகுதியில் நடந்த மோதலை தடுக்க 14 முறை வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சுடும் நடத்தினார்கள்.

அதன்பின்னர் மீனவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் மோதல் நடந்த 3 மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுதால் கடலோர பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் மீனவர்களின் மோதலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அதன்பின்னர், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய 3 மீனவ கிராமங்களில் 144 தடையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பித்தனர், அதன்படி நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் ஆகிய 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது என்றும், மறுஉத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

அந்த தடை உத்தரவின்படி 3 கிராமங்களிலும் 5 பேருக்கு மேல் நடமாடக்கூடாது. தேவையின்றி எங்கும் கூட்டம், போராட்டம் ஆகியவை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் 3 கிராமத்தை சேர்ந்த 600 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலிசார் தரப்பில் தகவல்கள் தெரிவித்துள்ளனர்

Views: - 306

0

0