குப்பை கழிவுகளை சுடுகாட்டில் கொட்டி எரிப்பதால் நோய் தொற்று அபாயம் : பொதுமக்கள் அவதி…

Author: kavin kumar
18 January 2022, 3:50 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நகராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் குப்பைகழிவுகளை கொட்டி எரிப்பதிலிருந்து வெளியேறும் புகையால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளில்,70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துனமனை எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுக்காட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்களில் அடையாளம் தெரியாத இறப்பவர்களையும், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று பலன் இல்லாமல் இறப்பவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க வராமல் இருக்கும் உடல்களையும் நகராட்சி சுடுக்காட்டில் தான் அடக்கம் செய்ப்படுகிறது. தற்போது சுடுகாட்டில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பபைகளையும், இறைச்சி கடைகளில் பயன்படுத்தும் கழிவுகளையும் சுடுகாட்டில் கொட்டி செல்கின்றனர்.

அதே போல் இறந்தவர்கள் பயன்படுத்திய உடைகளையும், மாலைகளையும் வீசிசெல்வதை மொத்தமாக கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை பரவி ஒருவகையான நெடி உடன் வீசுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுடுகாட்டில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிப்பவதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 214

0

0