திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா விற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆகி 78 நாட்களில் தனது கணவர் மாமனார் மற்றும் மாமியார் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு புதுமணப்பெண் ரிதன்யா கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோரை சேயூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கவின் குமார் தரப்பில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் கவின்குமார் அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ரித்தன்யாவின் பெற்றோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் தர மறுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து கவின் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, ரிதன்யாவின் கணவர் மாமனார் மற்றும் மாமியாருக்கு ஜாமீன் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இருந்த போதிலும் சட்டத்தை நம்புகிறோம்.
எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என, நீதி அரசர்கள் உரிய நீதி வழங்குவார்கள், என்று நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும், தமிழக முதல்வருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் முதல்வர் அதற்கு நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீதி கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும் என அவர் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.