88 நாட்களுக்கு பிறகு வாழ்விடத்தை நோக்கி திரும்பிய ரிவால்டோ : தமிழகத்தில் காட்டு யானை வரலாற்றில் இதுவே முதன்முறை!!

Author: Udayachandran
3 August 2021, 6:14 pm
Rivaldo Elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : தமிழகத்திலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் கராலில் அடைக்கப்பட்டிருந்த காட்டுயானை ரிவால்டோ வனப்பகுதியில் விடப்பட்டது.

தும்பிக்கையில் காயமடைந்த ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் சுற்றி வந்தது. சுற்றுலா பயணிகள் உள்ளூர்வாசிகள் உணவளித்து வந்தனர். காட்டுயானையான இந்த ரிவால்டோ யானைக்கு வயது சுமார் 35 முதல் 40 வயதாகிறது.

மேலும் பொதுமக்கள் அச்சுறுத்தல் காரணமாக இந்த காட்டு யானைக் ரிவால்டோ
உணவு தேடி கிராம பகுதிக்குள் நுழைந்து உலா வந்தது . இந்நிலையில் தும்பிக்கையில் காயமடைந்த இந்த யானைக்கு சிகிச்சையளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இதற்கான 8 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்தது. ஆய்வுக்குப் பின் வனப்பகுதியில் விடுவதா அல்லது யானைகள் முகாமில் பராமரிப்பதா என முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஆய்வுக்கு பின் யானையை வனப்பகுதியில் விட முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 3 மாதமாக வாழைத்தோட்டம் பகுதியில் கராலில் அடைக்கப்பட்ட ரிவால்டோ யானை இன்று விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்திலேயே முதன்முறையாக கராலில் அடைக்கப்பட்ட யானை வனப்பகுதிக்குள் விடப்பட உள்ளது.

இன்று அதிகாலை பாதுகாப்பான முறையில் கராலிலிருந்து விடுவிக்கப்பட்ட காட்டு யானை தமிழக-கர்நாடக எல்லைப் ஒட்டிய பகுதியில் உள்ள சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க 4 பேர் கொண்டவனக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் தொழில்நுட்ப முறையிலான ரேடியோ காலர் பொருத்தப்பட்டு முதுமலை வனத்தில் விடப்பட்டுள்ள காட்டு யானையை கண்காணிக்க வன குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு ஒரு முறை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து ரேடியோ காலர் மூலம் வனத்திலுள்ள யானை கண்காணிக்கப்படும் என வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹீ தெரிவித்தார்.

Views: - 206

0

0