சாலையில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு : லாரி ஓட்டுனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது..

Author: kavin kumar
20 January 2022, 2:24 pm
Quick Share

சென்னை: சாலையில் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுனரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை செங்குன்றம் பாடிய நல்லூர் , பாலகணேசன் நகரை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (29). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் மஞ்சம் பாக்கம் ரவுண்டானா , 200 அடி சாலையில் லாரியை ஓட்டி சென்ற போது இவரது லாரியை இருசக்கர வாகனத்தில் வந்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பொன் பாண்டியன் (39) என்பவர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது சாலையில் வழியில்லாமல் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த பொன் பாண்டியன் லாரியை மடக்கி நிறுத்தி லாரி டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இருவருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் பொன் பாண்டியன் கையில் இருந்த சிறிய கத்தியால் டிரைவரை வயிற்றுப் பகுதியில் குத்தினார். காயமடைந்த அவரை பொதுமக்கள் உடனே மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரை சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மாதவரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 215

0

0