சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்!

22 August 2020, 4:32 pm
Vijayabhaskar Help - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயமடைந்த நபருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள பாரேரி என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

அப்போது அவ்வழியாகச் சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரை நிறுத்தி காயமடைந்த இளைஞருக்கு மருத்துவ உதவி செய்து 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . அவரது மனிதாபிமான செயலை அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.

Views: - 26

0

0