தொழிலை அடையாளப்படுத்தி சான்றிதழ்: சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டம்..!!

Author: Rajesh
18 April 2022, 2:00 pm
Quick Share

கோவை: சாதி சான்றிதழ்களில் தங்கள் தொழிலை அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழக வண்ணார் பேரவையினர் சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழ்நாடு வண்ணார் பேரவையினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கப்படும் சாதி சான்றிதழில் வண்ணார் சலவை தொழிலாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், தாங்கள் செய்யும் தொழிலை அடையாளபடுத்தும் விதமாக இந்த சாதி சான்றிதழில் பெயர் அமைந்துள்ளதாகவும், இதனை உடனடியாக நீக்கி இந்து வண்ணார் என்று குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சாதி சான்றிதழ்களை கிழித்தெறிந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Views: - 722

0

0