தொடர் கனமழையால் பழவேற்காடு ஏரி நிரம்பி சாலையில் வெள்ளம் : வேன் சிக்கியதால் பரபரப்பு!!
17 November 2020, 10:48 amQuick Share
திருவள்ளூர் : பழவேற்காடு ஏரி நீரில் சாலை மூழ்கிய நிலையில், அஜாக்கிரதையாக தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிவந்த வேன் வெள்ள நீரில் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள செஞ்சி அம்மன் நகர் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதிகளில் உள்ள சாலை பழவேற்காடு ஏரி நீர் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்பத்தூர் பகுதிக்கு தனியார் நிறுவனத்திற்கு12 ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனிவேன் மழைநீரில் சிக்கியதால் ஊழியர்கள் 12 பேர் அதிஷ்டவசமாக தண்ணீரில் மூழ்காமல் தப்பினர்.
அவர்களை மீட்டு பொதுமக்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். வேன் வெள்ள நீரில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பழவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது