சாலையில் கிடந்த ஆண் குழந்தை சிகிச்சைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைப்பு..!

26 August 2020, 4:05 pm
Born Baby Safe To Home - Updatenews360
Quick Share

கோவை : கோவை சரவணம்பட்டி அருகே தனியா விடப்பட்ட குழந்தை ஒன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை சரவணம்பட்டி எஸ்.எம்.எஸ் மஹால் பின்புறம் கடந்த 21ம் தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டது. 1கிலோ 90 கிராம் எடையில் இருந்த அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனை தொடர்ந்து, குழந்தை தற்போது குழந்தையின் உடல் நலம் தேறி 2 கிலோ 88 கிராமாக உயர்ந்தது. தொடர்ந்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பொறுப்பில் ஏற்க பட்டு சேலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.