வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல் நிலையத்தை கண்டித்து சாலைமறியல்…

6 November 2020, 8:34 am
Quick Share

கோவை:கோவை ஜிஎன் மில் அருகே, நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல் நிலையத்தை, கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி, இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், நேற்றுஇரவு வழக்கும் போல், கடையை பூட்டி சென்ற நிலையில், இன்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அவர்களின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது , இதனால், சிசிடிவி காட்சிகளை கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர், ஆனால் காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதால் காவல்துறையினர் மீது ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்களான லட்சுமி, மற்றும், அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கன்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இதுகுறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0