சாலையோரம் குடிபோதையில் ரகளை : போதை ஆசாமிகளை எச்சரித்த காவலருக்கு அரிவாள் வெட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 10:53 am
Police Atttacked -Updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்ட போலீசை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவர் திருவாரூர் மாவட்டம் இடையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி தற்போது கடலோர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல் பங்க் அருகே சிலர் குடிபோதையில் சாலையோரம் நின்றபடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியே வந்த சக்திவேல் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனையடுத்து காவலர் சக்திவேல் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது மீண்டும் அங்கு வந்த அந்த நபர்கள் சக்திவேலை கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்றுள்ளனர். இதில் தலை மற்றும் கையில் காயமடைந்த போலீஸ் சக்திவேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பாகசாலை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 431

0

0