திருப்பூர் அருகே மகேந்திரா ஷோரூம் உட்பட 5 கடைகளில் கொள்ளை : கூட்டுக்களவாணிகள் கைது!!

29 January 2021, 10:15 am
Theft Arrrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அரசு பேருந்து பணிமனை எதிரே அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அரசு பேருந்து பணிமனை எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்லடத்தை சேர்ந்த செந்தில் என்பவர் துணி கடையும்,ஷர்மிளா என்பவர் செல்போன் கடையும் நடத்தி வருகின்றனர். அருகருகே இரும்புக்கடை, மகேந்திரா ஷோரூம், மற்றும் ஒரு மளிகை கடை உள்ளது.

இந்நிலையில் இந்த ஐந்து கடைகளையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று துணிக்கடையில் துணிகளையும், செல்போன் கடையில் செல்போன்,செல்போன் சார்ஜர்கள், கேமரா, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர்.

அதனைத் தொடர்ந்து மகேந்திரா ஷோரூமில் புகுந்தவர்கள் அங்கிருந்த இருசக்கர வாகன உதிரி பாகங்கள், இரும்பு கடையில் இருந்து இரும்புகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி பல்லடம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பல்லடம் அருகே போலீசார் வாகன பரிசோதனையில் ஈடட்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த பிரதீப், வினோத் என்பது தெரிய வந்தது மேலும் அவர்களது நண்பர்களான திருமூர்த்தி மற்றும் திருமுருகன் ஆகியோருடன் இணைந்து அந்த கடைகளில் திருடியதையும் ஒப்பு கொண்டனர்.

மேலும் இவர்கள் மீது பல்லடம்,மங்கலம்,சுல்தான் பேட்டை காவல் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளதும் குறிப்பிட தக்கது.இதனை அடுத்து அவர்கள் நால்வரையும் பல்லடம் போலீசார் கைது செய்தனர்

Views: - 25

0

0