நகைக்கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை… ஓட்டை வழியே உள்ளே சென்ற கொள்ளையனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 4:33 pm
Jewel Shop Theft - Updatenews360
Quick Share

கோவை சிறுவாணி சாலையில் பூலுவபட்டி உள்ளது. இந்த பகுதியில் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட கடைகள் உள்ளன.

அதில் பூலுவபட்டியை சேர்ந்த கிரி என்பவர் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகே தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அதிகாலை தங்க நகைக்கடையை குறி வைத்து கடையின் பின் புறம் மற்றும் அருகில் உள்ள டீக்கடை பட்டர் பூட்டு, மருந்துக்கடை பட்டர் பூட்டு ஆகிய இரண்டு கைகளை உடைத்து நடுவில் உள்ள நகைக்கடைக்கு உள்ளே நுழைய சுவற்றை துளையிட்டு உள்ளனர்.

அப்பொழுது ஆலந்துறை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடை அருகே போலீசார் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் கடப்பாறை , சம்மட்டி ஆகிய திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

சரியான நேரத்தில் காவல்துறையினர் வந்ததால் பல லட்சம் மதிப்பு உள்ள தங்க நகைகள் தப்பின. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 149

0

0