கத்தி முனையில் பெட்ரோல் பங்கில் கொள்ளை : முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்!!

8 February 2021, 4:46 pm
Petrl Bunk Theft - Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனத்தில் பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் 38,000 ரூபாய் ரொக்கப் பணத்தி துணிகரமாக கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலை அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சர்வீஸ் சாலை ஓரம் உள்ளது டிகேபி பெட்ரோல் பங்க்.
இந்த பங்கில் நேற்று இரவு புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 24), எறையானூர் பகுதியை செந்தில்(வயது 38), ஆகியோர் இரவு பணியில் இருந்துள்ளனர்.

அப்போது இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பைக்குக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கூறி உள்ளனர். அப்போது சுரேஷ் என்பவர் பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போது அவரது கழுத்தில் கத்தியை வைத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மற்றும் செந்தில் என்பவரின் கையில் கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த 2ஆயிரம் ரூபாயும், மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் மங்க்கி குல்லா அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பெட்ரோல் பங்க் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திண்டிவனத்தில் பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் 38 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0