கல்லூரி மாணவரிடம் வழிப்பறி…செல்போன், பணம் பறிப்பு: கத்தியால் தாக்கிய 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

Author: Rajesh
31 ஜனவரி 2022, 10:10 காலை
Quick Share

கோவை : கோவையில் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் மற்றும் பணம் பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிகில். பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பி.காம் படித்து வருகிறார். நேற்று நிகில் வீட்டில் இருந்த போது அவரது சகோதரர் நிதின் போனில் அழைத்து, தன்னிடம் சிலர் செல்போன் பறிக்க முயல்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நிகில் சம்பவ இடத்திற்கு சென்ற போது, நிதின் மற்றும் அவரது நணபரான கார்த்திக் ஆகியோரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.1000 பணத்தை மூன்று பேர் அடங்கிய கும்பல் பறித்து சென்றது.

தொடர்ந்து நிகில் அவர்களிடம் சென்று, பணம் மற்றும் செல்போனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் கைகலப்பானதில் நிதின் மற்றும் நிகில் மீது அந்த மீது மூவரும் கடும் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அம்மன்குளம் பகுதியை சேர்ந்த பிரவீன், மோசஸ், ஜகன் ஆகியோர் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 2233

    0

    0