ராக்கெட் விழுந்து குடிசைகளில் தீ விபத்து : நகை,பணம் எரிந்து சேதம்!!

14 November 2020, 7:37 pm
Fire- Updatenews360
Quick Share

சென்னை : பட்டாசு வெடித்து கொண்டாடிய போது ராக்கெட் நெருப்பு குடிசைகள் மீது விழுந்ததில் , 3 குடிசைகள் தீயில் எறிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை செம்பியம் மதுரை சாமி மடம் மெயின் தெருவில் ராக்கெட் பட்டாசு விழுந்து ஆனந்தன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த 3 குடிசைகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன.

உடனே இது குறித்து உடனடியாக செம்பியம் தீயணைப்பு துறையினர் மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்குள் குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இதில் முருகன் மற்றும் சுந்தரி ஆகியோர் வீடு முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் 10 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. இரண்டாவது வீட்டில் சாமுண்டீஸ்வரி மற்றும் திருமலை என்பது வீட்டில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

3 வது வீட்டில் ஆட்டோ டிரைவர் தினேஷ் மற்றும் முத்துலட்சுமி என்பவரது வீட்டில் வீட்டில் இருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் ஏசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இது குறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0