குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : இந்திய விண்வெளித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 7:16 pm
Rocket - Updatenews360
Quick Share

குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ரூ.6.24 கோடி ஒப்பந்தப் புள்ளிக்கான அறிவிப்பை இந்திய விண்வெளித்துறை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்த பின்னர் தமிழ்நாடு ராக்கெட் உபகரணங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளம் என இரண்டையும் கொண்டுள்ள மாநிலம் என்ற பெருமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 134

0

0