மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் : அதிர்ச்சியில் போலீசார்!!

9 May 2021, 10:16 am
Rocket Launcher in net- Updatenews360
Quick Share

நாகை : கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் குறித்து கடலோர காவல் குழும போலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வலையில் இரும்பாலான மர்ம பொருள் ஒன்று சிக்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மர்ம பொருளோடு உடனடியாக கரைக்கு திரும்பினர். இது குறித்து கிராம பஞ்சாயத்தார் கொடுத்த தகவலின்பேரில், கீழையூர் கடலோர காவல் குழும போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிய வந்தது.

ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றிய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 129

0

0