பழனி மலையில் பாறை மீது மோதி ரோப் கார் விபத்து : அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் விபத்து என தகவல்… பக்தர்களிடையே பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 3:56 pm
Rope car Acc - Updatenews360
Quick Share

பழனி மலை கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை அதிக பாரம் காரணமாக பாறை மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவைரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ரோப்கார் சேவை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது. ஒரு பெட்டிக்கு நான்கு பேர் விதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்யலாம்.

இந்நிலையில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழுவினர் திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் உச்சிகால பூஜையில் தரிசனம் செய்வதற்காக குழுவினர் மலைக்கு சென்றனர். இவர்கள் மலைக்கோவிலுக்கு ரோப்காரில் சென்ற அடுத்த 20 நிமிடத்தில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்ற போது அதிகபாரம் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரோப் கார் பாறையில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதி வழியில் நின்றது. இதையடுத்து ரோப் கார் ஊழியர்கள் உடனடியாக பார்வையிட்டனர். இதனையடுத்து பெட்டிகளில் சிறிய சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழனி கோவிலுக்கு 15 பேர் கொண்ட நவபாஷண சிலை பாதுகாப்பு குழு அமைக்கபட்டு மலைக்கோவிலுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே ரோப்கார் பாறையில் மோதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பழைய பெட்டிகள் நீக்கபட்டு புதிய பெட்டிகள் பொருத்தபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 558

0

0