அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் முடிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

16 June 2021, 6:34 pm
Quick Share

கரூர்: அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் ரூ.7 கோடி மதிப்பில் நடப்பாண்டில் இறுதிக்குள் முடிக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அருள்மிகுரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது பழமைவாய்ந்த இந்த திருக்கோயிலில் 1017 படிகள் உள்ளது மிக செங்குத்தாக இருக்கும் இந்த மலையில் முதியவர்கள் சிறியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ரோப்கார் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக உள்ளது. இது தொடர்பாக கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு பிறகு 2015 இல் மீண்டும் ரோப்கர் அமைக்க டெண்டர் கோரப்பட்டது 2017 ஆம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் 18 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

ஆயினும் தொடர்ந்து பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்ததால் அந்த பணிகளை விரைந்து முடிக்க இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு,துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று கோவிலை ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ரூ 7 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த ரோப்கார் திட்டப்பணிகள் ஜனவரி மாதமே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தபோதும், பணிகள் தொய்வாக தொடர்ந்து நடைபெற்று வருவதால், பணிகளை விரைந்து முடிக்க15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று இந்த ஆய்வினை மேற் கொண்டோம். நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவுபெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும் வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

திமுக தலைவர் மு கருணாநிதி முதன்முதலாக குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். ஆயினும் அப்போது இருந்தே இதுவரை குளித்தலை நகரத்திற்கு நிரந்தரமான நவீன பேருந்து நிலையம் இல்லாமல் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களும் கருத்துகள் அரசுக்கு அனுப்பியதன் அடிப்படையில் பல முறை தேர்வு செய்தபோது அறநிலையத்துறையில் இடத்தேர்வு செய்ததால் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் உங்கள் நடவடிக்கையால் இந்த பணிகள் முடிக்கப்படும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு அளித்தால் உடனடியாக அறநிலைய த்துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Views: - 144

0

0