தமிழகத்தின் 5 முக்கிய கோவில்களில் விரைவில் ரோப்கார் வசதி: அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி..!!

Author: Aarthi
26 July 2021, 4:22 pm
Quick Share

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 முக்கிய கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி | திருவள்ளூர் மாவட்டம்  | India

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Sholinghur Narasimha Swamy Temple part 2 | சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள்  கோவில் | HejeEntertainment, - YouTube

மேலும், மருதமலை கோவிலில் வயதில் முதியவர்களின் வசதிக்காக மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோவில்கள் மட்டுமே பிரசித்திப்பெற்ற கோவில்களாக கருதப்பட்டன என்றும் தற்போது 539 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, அவற்றை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

குளத்தில் சங்கு பிறக்கும் திருக்கழுக்குன்றம் திருத்தலம் || thirukalukundram  temple

தமிழகத்தில் முக்கிய மலைக் கோவில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக ரோப் கார் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். திருக்கோவில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் வரும் வட்டியை, கோவில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் புராதான சிலைகள் 2 அமெரிக்காவிலும், 1 சிங்கப்பூரிலும் இருப்பதாக தெரிவித்தார். விரைவில் அவை தமிழகம் கொண்டு வரப்படும் எனவும் உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், 180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேகர்பாபு தெரிவித்தார்.

Views: - 158

0

0