விதிகளை மீறும் பார்களால் பெருகும் குற்றச் சம்பவங்கள் : டாஸ்மாக் கடையில் பிரபல ரவுடி அடித்துக் கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 10:50 am
Rowdy Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : தடையை மீறி இயங்கிய டாஸ்மாக் பாரில் நேற்று இரவு பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூர்-வாஷிங்டன் நகரில் வசித்து வருபவர் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா(வயது 37). இவர் மீது பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன.

இந்நிலையில் பெருமாநல்லூரில் அரசு தடையை மீறி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பாருக்கு சென்ற பாபுராஜா குடிபோதையில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் பாபுராஜாவிற்கும், பாரில் இருந்தவர்களுக்கும் தகராறு முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது.

இதில் பாரில் இருந்தவர்கள் தாக்கியதில் பாபுராஜா காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு சென்ற பாபுராஜா உயிரிழந்ததாக தெரிகிறது.

இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலம் எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு பெருமாநல்லூர் காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூரில் அரசு தடையை மீறி டாஸ்மாக் பார்கள் செயல்படுகின்ற காரணத்தால் இதுபோன்ற குற்றசெயல்கள் பெருகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Views: - 476

0

0