2 ஆண்டுகள் தலைமறைவில் இருந்த வேலூர் ரவுடி: துப்பாக்கி முனையில் கைது செய்த காவல்துறை..!!

15 November 2020, 1:26 pm
crime-arrest-updatenews360
Quick Share

2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வேலூரை சேர்ந்த ரவுடியை பெங்களூருவில் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

வேலூர் மாவட்ட காட்பாடி அடுத்த வன்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்த 43 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜானி கடந்த 2018ம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து வேலூர் மாவட்ட தனிப்படை காவல் துறையினர் நேற்று பெங்களூருவில் பதுங்கி இருந்த ரவுடி ஜானியை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அவனது கூட்டாளி மைக்கேலுடன் கைது செய்தனர். ரவுடி ஜானியை பிடிக்க முயற்சித்த போது அவர் கட்டிடத்தின் மேல் இருந்து குதித்ததால் ஜானி மற்றும் மைகேலுக்கு கை மற்றும் கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் வேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி ரவுடி ஜானி மற்றும் மைக்கேலை 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

rowdy 3 - updatenews360

ரவுடி ஜானியை பார்க்க வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் ஜானியின் மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் கூடி கூச்சல் இட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜானியின் மனைவி கேட்டை உடைத்து மருத்துவமனை உள்ளே நுழைந்தால் அவரை காவல் துறையினர் அப்புரப்படுத்தியதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Views: - 53

0

0