என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் போலீசாரால் திட்டமிட்டு கொலையா..? அதிர்ச்சியளிக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை..!
11 September 2020, 7:14 pmசென்னை : போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான சங்கரை, கடந்த 21ம் தேதி கொலை வழக்கில் கைது செய்ய போலீசார் முற்பட்டனர். அப்போது, போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்கு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ரவுடி சங்கரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, ரவுடி சங்கரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி, அவரது தாயார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், மகனை போலீசார் திட்டமிட்டு போலீசார் கொலை செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு சம்மன் அனுப்பி, சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மேலும், சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரவுடி சங்கரின் உடலில் 3 குண்டுகளை தவிர 12 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ரவுடி சங்கர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
0
0