திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க
1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். இதன் பரம்பரை டிரஸ்டியாக இருந்து வருபவர் பிச்சுமணி ஐயங்கார்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலானதால், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் முறையாக அனுமதியும் பெறப்பட்டது.
ஆயினும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டியது கட்டாயம் என்பதால்
அக்கமிட்டி உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுனருரான மூர்த்தீஸ்வரியை அணுகி ஆய்வறிக்கை கேட்டபோது ஆய்வறிக்கை வழங்க மூர்த்தீஸ்வரி 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் இது குறித்து ஒழிப்பு துறை Dsp மணிகண்டனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூர்த்தீஸ்வரி லஞ்சப்பணம் ரூபாய் 1 லட்சத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் அவர் காரில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சமும் பிடிபட்டது.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.