“இதெல்லாம் ஒரு பொழப்பு“ : விசாரணைக் கைதியிடம் லஞ்சம் வாங்கிய அடாவடி பெண் காவல் ஆய்வாளர்!!

27 November 2020, 11:40 am
Madurai Birbery - Updatenews360
Quick Share

மதுரை : செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனிதா ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள பொண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்தது.

இதுதொடர்பாக முத்து செக்கானூரணி காவல் நிலையத்தில் நல்லதம்பி மீது புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் நல்லதம்பி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் நல்ல தம்பி அவரது மகன்கள் மாரி, கண்ணன், பேரன் கமல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நல்லதம்பியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்பே இல்லாத தனது மகன்கள் மற்றும் பேரன் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கேட்டுள்ளார். பெயரை நீக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நல்லதம்பி முதற்கட்டமாக முப்பதாயிரம் தருவதாகும் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு நல்லதம்பியிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். நல்லதம்பி பணத்தை அனிதாவிடம் கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். லஞ்சம் பெற்றது தொடர்பாக அனிதாவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 30

0

0