வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கம் உட்பட ரூ.1 லட்சம் கொள்ளை : அச்சத்தில் மக்கள்!!

Author: Udayachandran
1 October 2020, 3:16 pm
Thirupathur Theft - updatenews360
Quick Share

திருப்பத்தூர் : வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கத்தை திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரில் பிரதான பகுதியாக இருக்கும் ஹவுசிங் போர்டு பேஸ் 1 பகுதியைச் சேர்ந்தவர் வினாயகம். இவர் அதே பகுதியில் வாட்டர் கேன் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவர்களுடைய மனைவி ஜீவா என்பவரும் தங்கள் உறவினர்களின் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 50 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி பொருட்கள் என திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஜீவாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிக அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Views: - 47

0

0