பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு : தமிழக அரசு உத்தரவு!!

Author: Udayachandran
14 October 2020, 4:38 pm
Harassment Relief Fund - Updatenews360
Quick Share

பாலியல் வன்முறை குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்விற்காக ரூ.10 லட்சம் வரை இழப்பீமு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்முறை குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்விற்காக நிதி வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலத்துறை செயலாளர் மதுமதி அரசாணை வெளியிட்டுள்ளார்.

Secretariat staff in panic as more officials test +ve - DTNext.in

அதில், இந்த திட்டத்தின் கீழ் ரூ.14.96 கோடி சமூக நலத்துறை சார்பில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்க இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இழப்பீடும், அதே போல மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமமான பாலியல் தாக்குதல்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சமும், பாலியல் தொடர்பான தாக்குதலுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம், உடல் மற்றும் மன ரீதியாக காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில், பாலயில் வன்முறையால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

TN CM seeks Centre's help to evacuate fishermen stranded in Iran - The  Federal

பாலியல் வன்முறையால் கர்ப்பம் அடைந்திருந்தால் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, 80 சதவீதம் உடல் ரீதியாக இழப்பு ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 48

0

0