மக்களவை தேர்தலின் போது ரூ.11.48 கோடி பறிமுதல் செய்த விவகாரம் : திமுக எம்பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரி வசூலிக்க தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 12:26 pm
Kathir Anand -Updatenews360
Quick Share

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் தாமோதரன் என்பவரது வீட்டில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Lok Sabha polls cancelled in Tamil Nadu's Vellore after massive cash haul -  Elections News

இந்த பணம் கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கான வரியை செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

Stalin wary of Kathir's wife as dummy candidate - DTNext.in

இதனை எதிர்த்து வேலூர் தொகுதி திமுக எம்.பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வருமான வரித்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Cash seizure: Case filed against Durai Murugan's son Kathir Anand - Tamil  Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News,  Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate

அதே நேரம் இவ்வழக்கில் தனி நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால், கதிர் ஆனந்திடம் இருந்து வரி வசூலிப்பதை நான்கு வாரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 656

0

0