கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்ய இருந்ததாக திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது.
பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது. அதில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக தொடர்பாக எம்.பி கதிர் ஆனந்த், அவரின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 125(ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில், இன்று எம்.பி கதிர்ஆனந்த் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 22.09.2025 – ம் தேதிக்கு ஒத்தி வைத்து ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து எம்.பி கதிர் ஆனந்த் புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.