தனியார் பைப் தொழிற்சாலையில் ரூ.17 லட்சம் கையாடல் : கணக்கு காட்டாமல் போக்கு காட்டிய விற்பனை மேலாளர் தலைமறைவு… சிக்னலால் சிக்கிய சில்வண்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 10:02 pm
Arrest -Updatenews360
Quick Share

புதுச்சேரி : தனியார் பைப் தொழிற்சாலையில் 17 லட்சம் ரூபாய் கையாடல் செய்த அதன் விற்பனை மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள கலிதீர்தால்குப்பம் திருக்கனூர் சாலையில் உள்ளது அகர்வால் பைப்ஸ் என்ற தனியார் பிளாஸ்டிக் பைப் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை.

இதன் உரிமையாளர் சதீஷ் (43), இவர் கடந்த மாதம் 28 ஆம் தேதி, திருபுவனைக் காவல் நிலைத்தில் ஒரு புகார் ஒன்றினை அளித்தார் அதில் தனது தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் விற்பனை மேலாளர் மேசெக் என்பவர் ரூபாய் 17 லட்சத்தை கணக்கில் காட்டாமல் ஏமாற்றி வருவதாகவும், அப்பணத்தை மீட்டு தருமாறு தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து விசாரணை செய்த திருபுனை குற்ற பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த மேசேக்கை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் மூலம் மேஷாக் திருச்சி அன்பு நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தொழிற்சாலையில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகளை பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து அந்த பணத்தை கம்பெனியில் கட்டாமல் தன் குடும்ப செலவிற்காக செலவு செய்து விட்டதாகவும், தற்போது பணம் எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மேஷாக்கை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேஷாக் வேறு யாரிடமாவது பணத்தை கொடுத்து வைத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 942

0

0