ரெம்டிசிவர் மருந்து ஒன்று ரூ.19,000 : கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 2 பேர் கைது!!

6 May 2021, 12:28 pm
Remdesiver Arrest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கள்ளத்தனமாக ரெம்டிசிவர் மருந்தை ரூ.95,000க்கு விற்பனை செய்ய முயன்ற மருத்துவர் உள்பட 2 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பரவல் கராணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நோயாகளிக்களுக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டிசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து செலுத்தப்படுகிறது.

இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டும். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த போதிய அளவில் இருப்பதில்லை.

இதனால், இந்த மருந்து சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவமனையில் விற்பனை செய்யப்படுவதை வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மருத்துக்கு தற்போது தமிழகம் முழுவதும் தேவை அதிகரித்திருப்பதால், கள்ளச்சந்தையிலும் அதிக விலைக்கு விற்னை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்கெனவே வாங்கி பதுக்கி கைக்கப்பட்ட ரெம்டிசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரெம்டிசிவர் மருந்து ஒன்று பல ஆயிரங்களுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் மருந்து விழுப்புரத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் கல்பனாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் கல்பனா தலைமையிலான போலீசார் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கண்காணித்தார். அப்போது, பேருந்து நிலையம் வெளியே காரில் இருந்த இரண்டு பேரை விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நாட்டார் மங்கலத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் புதுச்சேரி, வில்லியனூர் ஆச்சார்யாபுரைச் சேர்ந்த மருத்துவரான விபவதேவர் (வயது 32), விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் மருந்துகத்தில் மருந்தாளுநராப் பணியாற்றி வரும் திண்டிவனத்தைச் சேர்ந்த முத்துராமன் (வயது 22) என்பது தெரியவந்து.

இவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டிசிவர் மருந்தை கள்ளத்தனமாக தலா ஒரு மருந்து ரூ.19,000 என்று 5 மருந்தை ரூ.95,000 க்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இவதையடுத்து, அவர்களிடமிருந்த 5 ரெம்டிசிவர் மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக, அவர்கள்  2 பேரையும் பிடித்து, விழுப்புரம் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடம் எங்கிருந்து ரெம்டிசிவர் மருந்து வந்தது. இது யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 238

0

0