உரிய ஆவணமின்றி எடுத்த வரப்பட்ட ரூ.2.94 கோடி ரொக்கம் பறிமுதல் : இளைஞர்களிடம் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 10:31 pm
Madurai IT -Updatenews360
Quick Share

மதுரை : உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கரிமேடு காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர்.

அவர் மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் எனவும் நகைக்கடை உரிமையாளர் எனவும் தெரிவித்தார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கரிமேடு காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அதில் நகை தொழில் வியாபாரம் செய்து வருவதாகவும் அதற்காக பணம் எடுத்துச் செல்வதாக முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களது பையிலிருந்து 2 கோடியே 94 லட்சம் ரூபாய் இருந்தது.

இதுகுறித்து இன்று மதுரை வருமான வரித் துறை அலுவலகத்திற்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் விக்னேஸ்வரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 168

0

0