சான்றிதழில் கையெழுத்து பெற ரூ.200 லஞ்சம் : வைரலாகும் விஏஓ உதவியாளரின் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 10:51 am
Corruption -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கட்டுமான நலவாரிய சான்றிதழில் கையெழுத்து போட ரூபாய் 200 லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் எழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று சின்ன துறை பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இதில கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டுமான நல வாரிய உறுப்பினர் அட்டை வாங்க சென்ற போது அந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியர் 200-ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

பாதிக்க பட்ட நபர் 200 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் காட்சியை பதிவு செய்து சமூக வலை தலங்களில் பரப்பி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சூழல் கிராம நிர்வாக அலுவலர் 2000/- ரூபாய் லஞ்சம் பெற்று பணி இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெளியான இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 445

0

0