இலவச மின்சாரம் வழங்க விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின் அதிகாரி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 10:24 pm
Bribery Arrest -Updatenews360
Quick Share

மதுரை : திருமங்கலத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னமங்கலம் அருகே உள்ள முத்தையாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (வயது 46).இவர் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் முதற்கட்டமாக 500 ரூபாயை செலுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இலவச மின்சாரம் காட்டு ராஜாவிற்கு அரசாணை வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அரசுக்கு ரூபாய் 24 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் தனக்கு ரூபாய் 25,000 பணம் வேண்டும் என கேட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காட்டு ராஜா, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரூபாய் 20 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளையும் அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செக்காகவும் உதவி மின் பொறியாளர் முகமது உவைஸ் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக உள்ளே நுழைந்து கையும் களவுமாக பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 268

0

0