சான்றிதழில் கையொப்பமிட ரூ.25 ஆயிரம் லஞ்சம் : கோவையில் கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 4:21 pm
Bribery Arrest -Updatenews360
Quick Share

கோவை : சான்றிதழில் கையொப்பமிட 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வடக்கு வட்டாட்சியர் கையும் களவுமாக பிடிப்பட்டார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். நாயக்கன்பாளையம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் செல்வ நிலை சான்று வாங்குவதற்காக வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் சான்றிதழில் கையெழுத்திட வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணி 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தந்த அலோசனை படி இன்று சின்னராஜ் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கோகிலாமணியிடம் வழங்கிய போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 569

0

0