முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை : ஆட்சியரிடம் வழங்கிய மாற்றுத்திறனாளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2021, 4:44 pm
CM Fund Handicapped Helps -Updatenews360
Quick Share

கோவை : தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 ஆயிரம் நன்கொடை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய பார்வையற்றோர் இணையம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 ஆயிரம் நன்கொடை இன்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், மாநில துணைத்தலைவர் ஜெமினி சின்ன கண்ணன், செயலாளர் சரவண மூர்த்தி ஆகியோர் இந்த நன்கொடையை வழங்கினர்.

Views: - 216

0

0